வெள்ளத்தில் சிக்கிய தனியார் நிறுவன வேன்: டிராக்டர் மூலம் மீட்பு
மதுராந்தகம் அருகே தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற வேன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தண்டயார்பேட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக பெண்களை அழைத்துச் செல்ல வந்த மகேந்திரா வேன் தண்டரைப்பேட்டை என்ற கிராமத்தில் மடுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
மேலும் மழைநீர் குறைந்து சென்றதால் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை பார்த்த கிராம மக்கள் டிராக்டர் மூலம் வேனை பத்திரமாக மீட்டனர்.