மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண உதவி!

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.;

Update: 2021-06-05 09:42 GMT

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கிரீன் அக்ரோ என்விரான்மென்ட் என்ற தனியார் நிறுவன உரிமையாளர் மனோகர், கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணி புரியும் முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.

நபர் ஒன்றுக்கு தலா 1,000 வீதம் 200 பேருக்கு ரூபாய் இரண்டு லட்சம் செலவில் 17 மளிகை பொருட்கள் கொண்ட நிவாரண பொருட்களை மதுராந்தகம் நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் வழங்கினார்.

Tags:    

Similar News