செங்கல்பட்டு அருகே காவல் நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

செங்கல்பட்டு அருகே திருட்டு வழக்கில் சந்தேகத்தில் பேரில் பிடித்து வந்திருந்த விசாரணை கைதி, காவல் நிலையத்திலிருந்து தப்பியோட்டம்;

Update: 2022-01-29 07:15 GMT

படாளம் காவல் நிலையம் 

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ்நிலையத்திற்குட்பட்ட சில இடங்களில் நடந்த திருட்டு வழக்குகள் சம்பந்தமாக படாளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனா்.அப்போது காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த சிலா், இந்த திருட்டுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து படாளம் போலீசாா் காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த வீரா (36)என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து படாளம் காவல் நிலையதில் வைத்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் காலையில் வீரா சிறுநீா் கழிக்க வேண்டும் என்று கூறினாா். இதையடுத்து காவல்வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அனுப்பினா். நீண்ட நேரமாகியும் வீரா திரும்பி வரவில்லை.

இதையடுத்து போலீசாா் கழிவறை சென்று பாா்த்தபோது,அவரை காணவில்லை. வீரா போலீஸ்நிலையத்தின் பின்பக்கம் வழியாக தப்பியோடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து படாளம் போலீசாா், தப்பியோடிய விசாரணை கைதி வீராவை தீவிரமாக தேடிவருகின்றனா்.

Tags:    

Similar News