இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இ-பாஸ் வைத்துள்ளதார்களா என போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2021-05-30 09:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் தளர்வில்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு அச்சிறுபாக்கம் காவல்துறையினர் இ-பாஸ் குறித்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சில நாட்களாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான வாகனங்கள் சென்னை செல்வதால் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் குறித்து சோதனை செய்ததில் அனைத்து வாகன ஓட்டிகளும் உரிய அனுமதி சீட்டு இ-பாஸ் வைத்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பீதி இருந்தாலும் அவர்கள் தேவையில்லாமல் பயணம் செய்யவில்லை என்பது அனைத்து வாகன ஓட்டிகளிடம் உள்ள அனுமதி சீட்டால் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News