3 நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கி தவித்த நபர் : உயிருடன் மீட்பு

மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கி தவித்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.;

Update: 2021-11-10 11:45 GMT

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிய நபரை  தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் சுமார் 13 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பதும் மதுபோதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் தெரியவந்தது. இந்நிலையில் பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News