அச்சிறுப்பாக்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

அச்சிறுப்பாக்கம் நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-03-28 11:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த நடுபழனி ஸ்ரீ மரகத பால தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்நாள் தேரோட்ட நிகழ்வு, இரண்டாம் நாள் விழாவான நேற்று முருக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதியில் வலம் வந்து மலையேறி சாமிதரிசனம் செய்தனர்.

முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் கோயில் நிர்வாகத்தின் சார்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா பங்கேற்று சிறப்பித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நடுபழனி தண்டபாணி தத்தாத்ரேயர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News