மழையால் சேதமடைந்த சிறுவர்களின் வீட்டிற்கு புதிய கான்கிரிட் வீடு கட்ட ஆணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சிறுவர்களின் வீட்டிற்கு, புதிய கான்கிரிட் வீடு கட்ட ஆணையை கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக் கண்டை கிராமத்தில் வர்ஷா மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு சிறுவர்கள் தாய் தந்தை புற்றுநோயால் இறந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீடு வடகிழக்கு பருவமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து சேதமாகி உள்ளது என சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது.
அதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்து வீடு கட்டுவதற்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் காங்கிரட் வீடு கட்ட ஆணை வழங்கினார். மேலும் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடு செய்து உள்ளார் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைபொருட்கள், பாய், மற்றும் தார்ப்பாய், மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் சிறுவர்களுக்கு உடனடியாக வாரிசு சான்று சாதி சான்று மற்றும் இடத்திற்கான பட்டா வழங்கினார். துரித நடவடிக்கை மேற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வீடு கட்டி முடித்துத்தர வட்டார வளர்ச்சி அதிகாரிகாரிகளிடம் தெரிவித்தார்.