தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஒருநாள் வேலைநிறுத்தம்
ஏழு அம்ச கோரிக்கையை தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஒருநாள் வேலைநிறுத்தம்;
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட சங்க செயலாளர் கோதண்டம் தலைமையில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பயிர்கடன், நகைகடன், மற்றும் மகளிர் குழு கடன்கள், தொடர்பான புள்ளி விபரங்களை தினமும் வெவ்வேறு வகையான படிவத்தை கால அவகாசம் கொடுக்காமல் அரசு கோருவதால் பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.
மேலும் சங்கங்களில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர் சம்பளம் இல்லாமல் பணியாற்றுகின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊதியம் அரசு வழங்க வேண்டும்.
நகை கடன் பெற்றவர்கள் தள்ளுபடி எதிர்நோக்கி நகைகளை திருப்பாத காரணத்தால் பெரும்பாலான கடன்கள் தவணை தவறியுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, சங்க பணியாளர் நலன் கருதி விரைவில் நல்லதொரு தீர்வு அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.