பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவஅணிவகுப்பு

Update: 2021-04-02 05:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் 452-டடாக் சி பட்டாலியன் கம்பெனி பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை கிருஷ்ணகோபால் தலைமையிலான 50 ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற ராணுவ ஒத்திகை நடத்தினர்.

இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா உத்தரவின் பேரில் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு ஒரத்தி பேருந்து நிலையம் எலப்பாக்கம் பேருந்து நிலையம் முதல் பிண்ணம்பூண்டி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் முக்கிய சாலையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் போது ஒரத்தி சப்இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News