மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில், இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பக்கத்தில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் பங்க் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச்.அசான்மவுளானா, வழிகாட்டுதலின்படி, மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில், மாநில இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசம்பந்தம் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சோத்துப்பாக்கம் விஜய்கௌதம் கிருஷ்ணா, தொகுதி செயலாளர் புகழேந்தி, நிர்வாகிகள் ராஜ்குமார், கலையரசன், வேல்முருகன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.