பாரத் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மருத்துவ முகாம்
பாரத் பல்கலைக்கழகம். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து, வில்வராயநல்லூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தின.
செங்கல்பட்டு மாவட்டம், வில்வராயநல்லூர் ஊராட்சியில், பாரத் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மதுராந்தகம் கோட்டம் இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு , கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் அழகுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திட்டத்தை பற்றி பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.
கால்நடை மருத்துவர் இந்துமதி கால்நடைகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்தார். அதன் பின்னர் பாரத் பல்கலைக்கழகம் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு இணைந்தும் கிராம தங்கல் திட்டம் கீழ்ம் 90 நாட்கள் தங்கி விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தனர். இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி தரணிபதி, கால்நடைகள் வளர்க்கும் கிராம பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதன் வழியில் கால்நடைகளுக்கு உதவும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும், வில்வராயநல்லூர் கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு கால்நடைகளை அழைத்து வந்து கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகளை கூறி, இலவசமாக மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசி போடச் செய்தனர். இதில் வில்வராயநல்லூர்ல் உள்ள விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெற்றனர்.