மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்
செங்கல்பட்டு, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து மளமளவென உயர்ந்து, தற்போது 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டத்தில், பரவலாக கனமழை பெய்துள்ளது. இம்மாவட்டத்த்மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 24, அடியில் தற்போது 23.3,அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.
தற்போது மதுராந்தகம் ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் உபரி நீர் அனைத்தும், தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கள் கால்வாய் வழியாக, வெளியேற்றப்பட்டு வருகிறது.