மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றம்

தொடர்மழையால், மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது; கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 02:45 GMT

மதுராந்தகம் ஏரி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி தற்போது 24.8 அடியாக உயர்ந்து, 910 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மதுராந்தகம் ஏரி, சுமார் 2411 ஏக்கர் பரப்பளவு கொண்டு, 694 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கும் தன்மைக்கொண்டது.

இந்த ஏரிக்கு நீர்வரத்து நேற்று மாலை வரை சுமார் ஆயிரத்து 720 கன கன அடி தண்ணீர் வந்த நிலையில்,  இன்று காலை முதல், இந்த நீர்வரத்து ஆனது 1500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 9500 கன அடி தண்ணீரானது அங்கு உள்ள 110 தானியங்கி சட்டர் மூலம் உபரி நீராக வெளியேறுகின்றது.

அதிகபட்சமாக 25 மேல் நீர்வரத்து இருந்தால் மட்டுமே மதகு திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டால்,  கிளை ஆற்றின் கரையோரமாக உள்ள முன்னூத்தி குப்பம், கத்திரிசேரி, புதூர், கே.கே.புதூர், தோட்ட நாவல், எருக்கஞ்சேரி உள்ளிட்ட 21 கிராம மக்களுக்கு,  தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News