மதுராந்தகம் எல்ஐசியின் 28வது கிளைக் கழக மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் எல்ஐசியின் 28வது கிளைக்கழக மாநாடு நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் எல்ஐசியின் 28வது கிளைக் கழக மாநாடு மதுராந்தகம் கிளை சார்பில் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவை அறிவித்துள்ளது. அதற்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் மக்களோடு இணைந்து பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
எல்ஐசி நிறுவனம் முதன் முதலில் 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 38 லட்சம் கோடி சொத்துக்களுடன் இருக்கிறது. எல்ஐசி நிறுவனம் ஆண்டுக்கு பாலிசிதாரர்க்கும் நாட்டுக்கும் பல உதவிகளை செய்து வருகிறது
எனவே இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனையை என்பது நாட்டுக்கும் பாலிசிதாரர்க்கும் கேடாகும் எல்ஐசி பங்கு விற்பனை என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள் பங்கு விற்பனை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக 30 கோடி ஊழியர்கள்2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என காப்பீட்டு கழக பொது செயலாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.