மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது : 22.9 அடியை எட்டியது
மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.9 அடியை எட்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது இதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 22.9 அடியை எட்டியுள்ளது.
இன்னும் 4 அங்குலம் நீர்வரத்து வர வேண்டி உள்ளதால் ஏரி விரைவில் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவு நீர் 694 மில்லியன் கன அடியாகும். தற்போது ஏரியில் 530 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 200மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மதுராந்தகத்தை மழை அளவு குறைவாக இருந்தாலும், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து மடுகு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிளி ஆறு ஆகியவை மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து பகுதிகளாகும். தற்பொழுது உத்தரமேரூா் மடுகில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் கனமழை பெய்தால் இன்று மாலைக்குள் ஏரி நிரம்பிவழியும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையடுத்து ஏரி முழுவதுமாக நிரம்பியதும்,ஏரியில் உடைப்பு ஏற்படுவதை தவிா்க்க மதுராந்தம் ஏரி திறந்து விடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.இதையடுத்து மதுராந்தகம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரையோரங்களில்,தாழ்வான பகுதிகளிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வருவாய்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.