மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சியில் அடங்கிய கழனிப்பாக்கம் கிராமத்தில் இன்று மின்கசிவு காரணமாக லோகநாதன், சங்கர், சுப்பராயன், என்பவர்களின் மூன்று வீடுகள் தீ விபத்து ஏற்பட்டது. லோகநாதன் என்பவரின் வீட்டில் பற்றிய தீ, மளமளவென்று அருகில் இருந்த இரு வீடுகளிலும் தீ பரவியது.
தகவலின் பேரில் மதுராந்தகத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடுகள் முழுமையாக எரிந்து தரைமட்டமானது.
இதில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள், நில பத்திரங்கள், குடியுரிமைக்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ்கள் என பல ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.