மதுராந்தகம்: வீட்டின் பூட்டைஉடைத்து 26 சவரன்நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை!
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வையாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை . திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் அதே பகுதியில் பெட்ரோல் நிலையம் வைத்ததுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாததால் இரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் 3.50 லட்சம் மற்றும் 26 சவரன் தங்க நகைகள், 3 கிலோ மதிப்புடைய வெள்ளி பூஜை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் சம்பந்தமாக படாளம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அஜய் என்கின்ற மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.