களத்தூர் ஊராட்சி மன்றதலைவர் பதவி ஏற்பு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு செ.திலகம் செல்லப்பன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி பொது மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கான பதவி ஏற்பு விழாவின் போது உதவி தேர்தல் அலுவலர் செ.எழிலன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது 1-வது வார்டு வள்ளிமுத்து, 2வது வார்டு அமிர்தவல்லி செல்லப்பன், 3-வது வார்டு மேனகா கண்ணன், 4வது வார்டு ஞானசவுந்தரி ஜெயராமன், 5வது வார்டு முத்துலட்சுமி வேல்முருகன், 6வது வார்டு அன்பு கோதண்டம், ஆகியோருடன் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.