தொடர் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தற்போதுவரை பெய்துவரும் கன மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தெற்கு அந்தமான் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் கன மழை கொட்டித்தீர்த்தது. மேலும் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தற்போதுவரை பெய்துவரும் கன மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி தற்போது 24.6 அடியாக உயர்ந்து ஏரியில் தற்போது 920 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மதுராந்தகம் ஏரி ஆனது சுமார் 2411 ஏக்கர் பரப்பளவு கொண்டு 694 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கும் தன்மைக்கொண்டது.
இந்த ஏரிக்கு நீர்வரத்து நேற்று மாலை வரை சுமார் ஆயிரத்து 720 கன கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை முதல் இந்த நீர்வரத்து ஆனது 1500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 9000 கண அடி தண்ணீரானது அங்கு உள்ள 110 தானியங்கி சட்டர் மூலம் உபரி நீராக வெளியேறுகின்றது. அதிகபட்சமாக 25 மேல் நீர்வரத்து இருந்தால் மட்டுமே மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திரக்கப்பட்டால் கிளைஆற்றின் கரையோரமாக உள்ள முன்னூத்தி குப்பம், கத்திரி சேரி, புதூர், கே.கே.புதூர், தோட்ட நாவல், எருக்கஞ்சேரி, உள்ளிட்ட 21 கிராம மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.