மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக செங்கல்பட்டு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் திடீரென மதுராந்தகம், மேல்மருவத்தூர், ராமாபுரம், அச்சிறுபாக்கம், ஒரத்தி, ஆத்தூர், மற்றும் செய்யூர் சித்தாமூர் சூனாம்பேடு இடைக்கழிநாடு, படாளம் அதன் சுற்றுப்பகுதியில் பரவலாக 1 மணிநேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. இந்த மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.