விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்
நெல் மூட்டைகளை அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் உட்பட்ட படாளம் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இவ்விடத்தில் அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக என் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அறுவடை செய்து போட்டுள்ளனர்.
ஆனால் இதுநாள் வரை நெல் மூட்டைகள் மூட்டைகளை எடுக்கவும் அதிகாரிகள் முன் வரவில்லை. எனக் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களாக பெய்த மழையில் நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து முளைக்க துவங்கியுள்ளது.
அதிகாரிகள் இனிமேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக உடனடியாக நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு விஷத்தையாவது வாங்கி கொடுக்க வேண்டுமென அவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
மேலும் உடனடியாக நெல் கொல்முதல் நிலையத்திலிருக்கும் நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை மேற் கொள்ளா விட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.