குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்கள்

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-11 08:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த காட்டுக்கரணை கிராமம் இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காட்டுக்கரணை கிராமத்தில் அரசு பள்ளிக்கூட வளாகம் மற்றும் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர்.

இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாழ் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News