பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து: 3 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்

மதுராந்தகம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மரபொருட்கள் எரிந்து சேதம்.

Update: 2021-08-31 13:17 GMT

மதுராந்தகம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மரபொருட்கள் எரிந்து சேதம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சென்னேரி கிராமத்தில் இயங்கி வரும் அப்துல்ரசாக் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை மற்றும் மர வீட்டு உபயோகப் பொருட்கள் இந்த தயாரிப்பு நிலையத்தில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் பழைய மற்றும் புதிய உயர்தர மரங்களைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, மேஜை, டைனிங்டேபிள், போன்ற பொருட்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிலையமாகும்.
இதில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை முழுவதும் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களும், பொருட்கள் செய்ய வைக்கப்பட்டிருந்த மரங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 
மேலும் இதில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மரபொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.
இந்த விபத்து என்பது அதிகாலை 2 மணி  என்பதால் உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் கடை முழுவதும் எரிந்தது. இதுகூறித்து அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடை முழுவதும் இருந்து முற்றிலும் எரிந்துவிட்டது. இந்த தீ விபத்து கூறித்து ஒரத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News