அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில், மாவட்ட அலுவலர் உத்தரவுப்படி அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பாக, அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோத்துப்பாக்கம் பஸ் நிலையம் அருகிலும், தீபாவளி தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மு.தீ.அ த.வீராசாமி, ஆ.பிரபு மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தீ விபத்து தடுப்பது, விபத்து நேரத்தில் மேற்கொள்ள வேண்டியது, தீ முதலுதவி சிகிச்சை முறை குறித்து விளக்கினர்.