மதுராந்தகத்தில் மின்கசிவால் தீ 20 ஆடுகள் எரிந்து நாசம்

மதுராந்தகம் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் தீயில்கருகி பலியாகியது.;

Update: 2021-03-13 08:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது  குடும்பத் தொழில் ஆடு வளர்ப்பது ஆகும். இவருக்கு சொந்தமான வெள்ளாடுகள் வழக்கம்போல் நேற்று மேய்ச்சலுக்கு  சென்றது.  பின்னர் வீட்டுக்கு ஆடுகளை அழைத்து வந்தவர் வழக்கம் போல ஆடுகளை கொட்டகையில் அடைத்தார்.

ஆட்டு கொட்டகையில் உள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஓலைக் கொட்டகை  தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் எரிந்து நாசமாகியது. இவற்றின் மதிப்பு சுமார் ௧ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஓரத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News