மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரத்தடி பிரசாரம்
மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரத்தடியில் அமர்ந்து பிரச்சாரம்;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மரத்தடியில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இதில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நேத்தபாக்கம், பெருவேலி,தொன்னாட்டு , நீர்பெயர்,ஜமீன்புதூர், இரும்பேடு,நல்லூர், ஒழவெட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.
தொன்னாடு கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ஆரம்ப பள்ளி, இரவு நேர பாடசாலை, பேருந்து வசதி, குடிநீர் குளத்தை தூர்வாரி சீரமைத்து தருதல், போன்றவைகளை செய்து தர வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆத்தூர்வா. கோபாலகண்ணன், மாவட்ட துணை செயலாளர் முதுகரை சங்கர், மாவட்ட தலைவர் குணசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் புதூர் தனுசு, தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், மத்திய ஒன்றிய செயலாளர் பலராமன், ஆதிகேசவன், தம்பிஏழுமலை, மாநில மாணவரணி செயலாளர் சத்ரியன்சதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எண்டத்தூர் வேலுநாயக்கர், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் இளைஞரணி ஜீவா, பரத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பளித்தனர்.