தமிழகத்தில் கோவிலுக்கு செல்ல தடை நீக்கம்: கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழகத்தில் இன்று முதல் கோவிலுக்கு செல்ல தடை விலக்கப்பட்டது. கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2022-01-28 04:45 GMT

ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கு மற்றும் கோவில்களுக்கு செல்ல தடையை விலக்கியுள்ளது.

இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம், பெரும்பேர்கண்டிகை, உள்ளிட்ட பகுதிகளில் புகழ்பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோயில், பெரும்பேர் எல்லையம்மன் கோவில், நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர், உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News