நடு பழனி மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்
நடு பழனி மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வைரவேல் ஏந்தி காவடி எடுத்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில் புகழ்பெற்ற நடுபழனி என்றழைக்கப்படும் மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி கிருத்திகை முன்னிட்டு மறைமலை நகரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைரவேல் ஏந்தி பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, அன்னக்காவடி, சந்தனக்காவடி, பால்குடங்கள் ஏந்தியவாறு நடைபயணமாக வந்து தனது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
அதன் பின்பு பக்தர்களின் கொண்டுவந்த பாலினைக் கொண்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.