கொரோனா விழிப்புணர்வு ஓவியம்...

அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம்;

Update: 2021-05-10 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையில் உள்ள அச்சிறுப்பாக்கம் நகரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரமாண்டமான ஓவியம் வரையப்பட்டுள்ளது.

அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் கொரோனோ நோய் ஒழிப்பு குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டறிக்கை பிரச்சாரம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் நகர மக்கள் பிரதான சாலையில் பிரமாண்டமான விழிப்புணர்வு ஓவியம் வரைய செய்துள்ளார். இந்த ஓவியத்தில் முக கவசம் உயிர்க்கவசம் சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்த பிரதான வாசகத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் தமிழ்நாடு ஊழியர் சங்கம் கழகத்தைச் சேர்ந்த பாரதி குழுவினர் வரையப்பட்டனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Similar News