பெரும்பாக்கம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு
பெரும்பாக்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்;
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம், ஒரத்தூர், கூடலூர், தண்டரைபேட்டை, ஆகிய ஊராட்சிகளில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூறி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கினார். இதில் பயனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.