கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், காவல்துறை வணிகர்கள் பங்கேற்பு.;
மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் மற்றும் காவல் துறை இணைந்து கொரோனா கட்டுப்பாடுகள் வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரத்தில் கொரோனா பெரும் தொற்று தடுக்க பாதுகாப்பு நலன் கருதி நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி மளிகை கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்க வேண்டும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மதுராந்தகம் காவல் துறை ஆய்வாளர் ருக்மாங்கதன், காவல் போக்குவரத்துத் துறை ஆய்வாளர் ஆய்வாளர் ஆனந்தராஜ், காவல்துறை துணை ஆய்வாளர் பரசுராமன், ஆகியோர் கலந்துகொண்டனர். மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் தலைவர் பிரபாகரன், அப்துல்சமத், பவித்ரா சீனிவாசன், துணைத்தலைவர் ஜெய்சந்த், ஜெய்ன், சுதாகரன், மற்றும் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.