முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி

முழு ஊரடங்கால் மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-01-09 10:18 GMT

முழு ஊரடங்கால் மேல் மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.

மேல்மருவத்தூரில் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே ரோந்து பணிகளில் ஈடுபட்டு உரிய தேவைகளுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிப்பவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.

அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்பகுதியில் நன்றாக காணப்படுகிறது

Tags:    

Similar News