மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில், பழமை வாய்ந்த எல்லையம்மாள் கோவில் உள்ளது. நேற்று இரவு மா்ம நபா்கள், இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனா்.
இன்று காலை வழக்கம் போல், கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி சுப்பராயன், கோயிலின் பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கிராம மக்கள் ஒன்று சோ்ந்து மதுராந்தகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தகவலில் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.