ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியலை வெளியிட பாஜகவினர் கோரிக்கை
அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியலை வெளியிட பாஜகவின்ர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 59 ஊராட்சிகளில் ஆவாஸ் யோஜனா திட்டமான பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டில் பயனடைந்த பயனாளிகளிடம் பட்டியல் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் இரா.முருகன் கோரிக்கை மனுவினை அளித்தார்.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து 59 ஊராட்சிகளில் உள்ள பயனாளிகளின் பட்டியலை உடனே வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறியுள்ளார் 2020-21ம் நிதி ஆண்டு முடிந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
பயனாளிகளின் பட்டியலை வழங்குவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கால தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 59 ஊராட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பட்டியலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.