பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியிள் பயின்ற 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுகள் வந்தவுடன் அப்பள்ளியில் பயின்ற உயர்கல்வி பயில உதவும் வகையில், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களின் வங்கிக் கணக்கில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆனால் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. எனவே கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.