மதுராந்தகம்: கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்புத்துறையினர்
மதுராந்தகம்: கிணற்றில் விழுந்த பசுமாட்டை ஒருமணிநேரம் போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் தீயணைப்பு நிலையத்தின் எல்லைக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக செல்லும்போது கிணற்றில் தவறி விழுந்தது. அப்போது அவ்வழியே சென்றவர்கள் பார்த்த சிலர் பசு மாட்டினை மீட்க அச்சிறுபாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அச்சிறுபாக்கம்தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் கிணற்றில் இறங்கி மாட்டினை கயிறு கட்டி ஏணி உதவியுடன் பாதுகாப்பாக மேலே தூக்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிருடன் மீட்டனர்.