மதுராந்தகம் அருகே நள்ளிரவில் காவலாளி குத்திக்கொலை

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், கத்தியால் குத்தியதில் காவலாளி உயிரிழந்தார்.

Update: 2021-06-18 03:35 GMT

மதுராந்தகம் அருகே உள்ள பழைய மாம்பாக்கத்தில், கொலையுண்ட காவலாளி பாண்டித்துரையின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழைய மாம்பாக்கம் பகுதியில், புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தராமனின் புதிய பெட்ரோல் பங்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு, அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்ற காவலாளி பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பாண்டித்துரை இடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரிடம் பணம் இல்லாததால், அவர்களுடைய முதுகில் கத்தியால் சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த பாண்டிதுரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் அரங்கேறிய இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News