செங்கல்பட்டு: அத்திவாக்கம் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அத்திவாக்கம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளுடன் ரோஜா பூ வழங்கி வரவேற்பளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி துவக்க பள்ளியில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு.
தமிழகத்தில் 600 நாட்களுக்குப்பின் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படுவதை ஒட்டி மாணவ - மாணவிகளை வரவேற்க பள்ளிகள் தயாராகி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக மாணவ மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின்னர் முக கவசம் அணிந்து பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
அப்போது அத்திவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜன் தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் இனிப்புகளுடன் ரோஜா பூ வழங்கி மாணவ மாணவிகளுக்கு வரவேற்பளித்தனர்.