மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக வாக்குறுதி

மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம். மாமண்டூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக வாக்குறுதி.;

Update: 2021-03-25 08:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மதுராந்தகம் அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வடபாதி கோ.அப்பாதுரை அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை வரவேற்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதில் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பிலாப்பூர், சிதண்டி, அத்தியூர், மெய்யூர், இந்திராநகர், வடபாதி, மாமண்டூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

மாமண்டூர் கிராமத்தில் நீன்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் இலவச வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக பொறுப்பாளர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News