செங்கல்பட்டு மாவட்டம் மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் நன்றி தெரிவித்த திமுகவினர்
செங்கல்பட்டு மாவட்டம் மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் திமுக சேர்மன், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் வாக்காளர்களுக்கு நன்றி கூறினர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அச்சிறுப்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவரும் திமுக அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளருமான ஒரத்தி கே.கண்ணன் மற்றும் 13 வது வார்டு மாவட்டகுழு உறுப்பினர் வசந்தா கோகுலகண்ணன், அச்சிறுப்பாக்கம் 14 வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பொன்மலர் சிவகுமார், மின்னல்சித்தாமூர், மின்னல்கீழ்மின்னல், கீழ்ப்பட்டு, உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது கிராமத்தில் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் கழக பொறுப்பாளர்கள் மூவருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட கவுன்சில,ர் ஒன்றிய கவுன்சிலர் மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொது மக்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பொது மக்கள் ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஆகியோரிடம் மின்னல் கீழ்மின்னல் கூடுதல் பள்ளிகட்டிடம், சமையல்கூடம், வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
அதனை பெற்று கொண்ட மூவரும் மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கபடும் என பொது மக்களுக்கு உறுதிஅளித்தனர்,
அப்போது மின்னல்சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பாலாஜி பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.