செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது
வெளி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய மதுராந்தகம் ஏரி நிரம்பியது
மதுராந்தகத்தில் உள்ள ஏரி செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும் இந்த மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்பொழுது 19.5 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து பகுதியான கிளியாறு மற்றும் நெல்வாய் மதகு ஆகியவற்றின் வழியாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மூன்று நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஏரியில் 19.5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. இப்பொழுது ஏரிக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏரியில் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், மழை தொடர்து பெய்தால் ஏரி சில வாரங்களில் நிறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.