மாநில அரசு எந்த உதவி கேட்டாலும் மத்திய அரசு செய்ய தயார்: பிஜேபி மாவட்ட தலைவர்
தமிழகத்திற்கு 700 கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு எந்த உதவி கேட்டாலும் செய்யத்தயார்
செங்கல்பட்டு மாவட்ட பிஜேபி கட்சி சார்பில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவர் வேத சுப்பிரமணியம்,இவர் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து ஒன்றிய பேரூர் பிஜேபி கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் அவர் மேலும் கூறியதாவது: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் அதிக பஞ்சாயத்துகள் நிறைந்த பகுதியாகும் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு கிராமப்புறங்களுக்கு பல்வேறு நல திட்டங்களை தந்துள்ளது. மேலும் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சென்னை பகுதிக்கு அன்றைய அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், வெங்கையா நாயுடு, போன்றோர் எடுத்த நடவடிக்கை காரணமாக, தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு இல்லை.
இந்த ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும். தற்பொழுது தமிழகத்திற்கு 700 கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு எந்த உதவி கேட்டாலும் தேசிய பேரிடர் விதிமுறைக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை தயாராக இருக்கிறார். மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். பிஜேபி சார்பில் மாவட்ட ஒன்றிய அளவில் குழுக்களை அமைத்து அதன் மூலம் மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம் என்றார் அவர்.