சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துபக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் சமத்துவ தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்தநாள் விழா பல்வேறு கிளைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிளையான டாக்டர் ஜான் சுரேஷ் இல்ல அலுவலகம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சே.இளையராஜா தலைமையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அலுவகம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஏ.சி.குமார் கலந்து கொண்டார். இதில் பொதுச் செயலாளர் த.கலைப்பிரியன், செய்யூர் தொகுதி பொது செயலாளர் பிரதாப், மதுராந்தகம் தொகுதி தலைவர் சுஜித், சித்தாமூர் ஒன்றிய தலைவர் பரமசிவம், செய்யூர் தொகுதி செயலாளர் புனிதவேல், மதுராந்தகம் தொகுதி பொது செயலாளர் வீரமணி, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் அருண், உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.