தத்தாத்ரேயர் ஆலயத்தில் அஷ்டமி விழா
அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் தத்தாத்ரேயர் ஆலயத்தில் அஷ்டமி விழா.;
அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூரில் உள்ள ஸ்ரீ பால தத்தாத்ரேயர் ஆலயத்தில் அனகாஷ்டமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் பஞ்சமுக கணபதி, ஸ்ரீ பால தத்தாத்ரேயருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் கலச பூஜைகள், ஸ்ரீ பால தத்தாத்ரேயருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கோயிலின் உட்பிரகாரத்தில் சுவாமி உலா வருதலும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. அதன் பின்னர், பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பித்தவுடன் பிரசாதம் அன்னதானமும், வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கடேசன், தம்பிஏழுமலை, வாயலூர் லோகு மற்றும் வன்னிய சமூக மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.