அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பிறந்தநாள் விழா: முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கல்
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை பேர்ட்ஸ் முதியோர் இல்லத்தில் அரிமாசங்க மாவட்ட ஆளுநர் 324.மாவட்டம் மூத்த வழக்கறிஞர் லயன் கே.அய்யனாரப்பன் பிறந்த நாளை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் புதிய சகாப்தம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற முதியவர்களுக்கு சாசனத் தலைவர் லயன் பொறியாளர் பி.சக்திவேல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சாசன செயலாளர் லயன் ஆர்.சத்தியகுமார், சாசன பொருளாளர் லயன் கே.குமார், மண்டல தலைவர் பொறியாளர் லயன் அ.கண்ணன், பேட்ஸ் முதியோர் இல்லம் சேர்மன் சங்கர், உட்பட அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.