திருமலை வையாவூர் திருக்கோவில் சார்பில் அன்னதானம்
திருமலை வையாவூரில் அன்னதானம் வழங்கப்பட்டது;
செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த சின்ன திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் திருக்கோவிலில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி அன்னதானம் வழங்குவது தொடங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதல்படி திருமலைவையாவூர் திருக்கோவிலின் சார்பில் கோயில் செயல் அலுவலர் சரஸ்வதி, கோயில் பட்டாச்சாரியார் பாலாஜி, எழுத்தர் சுபலட்சுமி ஆகியோர் முன்னிலையில் காய்கறி கலவை உணவுகள் வீடற்ற ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.