சாலை பணிக்காக மரங்களை வெட்டும் போது மாற்று மரக்கன்றுகளை நட வேண்டும்

சாலை விரிவுபடுத்தும் பணிக்காக மரங்களை வெட்டும் போது மாற்று மரக்கன்றுகளை நடவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-06 08:00 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் வந்தவாசி இடையே உள்ள நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதால் மாற்று மரங்களை நட வேண்டும் என்று  தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் வந்தவாசி நெடுஞ்சாலையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புளியமரம், வேப்பமரம், நாவல்மரம், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்து வந்தது. சமீப காலமாக சாலை மேம்படுத்தும் பணிக்காக பழமை வாய்ந்த மரங்களை ராட்சத இயந்திரம் கொண்டு வேரோடு அழித்து வருகின்றனர்.

இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து இயற்கை வளம் அழிந்து மண்அரிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மாநிலத் தலைவர் கோ.முனுசாமி கூறுகையில் மரங்களை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பகுதியில் மாற்று மரக்கன்றுகளை நட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News