பள்ளிப்பேட்டையில் மதுராந்தகம் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் பிரசாரம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேலுவை ஆதரித்து, அதிமுகவினர் பள்ளிப்பேட்டை பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை கிராமத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன் ஆலோசணைப்படி மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம்குமரவேலுவை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சார்ந்த ஓட்டுநர் பிரிவு ஒன்றிய செயலாளர் ஐ.செல்வம், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய தலைவர் பி.ஜி.மணி, சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் கே.கமால், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சி.ராமச்சந்திரன், கிளைசெயலாளர் இ.முத்துக்குமரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.சூரியகுமார், பா.ம.க தோழமை கட்சியினர் பள்ளிப்பேட்டை சத்யா, உட்பட கழக நிர்வாகிகள் இருந்தனர்.