வையாவூரில் மின்கசிவு விபத்தில் வீடிழந்த குடும்பங்களுக்கு அதிமுகவினர் உதவி

வையாவூரில் மின்கசிவு விபத்தில் வீடு இழந்த குடும்பங்களுக்கு அதிமுகவினர் உதவிகள் வழங்கினர்.;

Update: 2022-01-01 09:30 GMT

மின்கசிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிமுகவினர் உதவிகள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்து இரண்டு குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளரும், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல் நிவாரண உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.அப்பாதுரை, மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வே.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News