அச்சிறுபாக்கம் பேரூராட்சி கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அவலம்
அச்சிறுபாக்கம் பேரூராட்சி கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அவலநிலை உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு உற்பத்தியாகிறது. இதானல் டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது.
ஆகவே கொரானா வைரஸ் தடுப்பு காலத்தில் தூய்மை பணியில் முழுமையாக ஈடுபடாமல் இருப்பதால், நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது.
தினசரி கால்வாய்கள் தூய்மை படுத்தி சுத்தம் செய்து மருந்துகள் தெளிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்